top of page

மரம் வளர்ப்போம்

Oct 19

2 min read

0

3

 மரம் வளர்ப்போம்


மரம் வளர்ப்போம்",


 "இயற்கையைக் காப்போம்",

 

  "இயற்கையை நேசி"

  

 "இயற்கையோடு வாழ்வோம்" 

 


இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. 


காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது.


 இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. 

 


எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். 


இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. 


எனவே "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி


 "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். 



பைன் மரம் 


இது கொடைக்கானல் அதிகமாக வளரக்கூடிய ஒரு மரம்


 இந்த மரத்தைக் கொண்டு விலை உயர்ந்த மரப் பொருட்கள் செய்கின்றனர்

 

முக்கியமாக ரூபாய் நோட்டுக்கு தேவையான காகிதத்தை இந்த மரத்தின்  கூலை  பயன்படுத்துகிறார்கள் இது   மதிப்புக்குரிய மரமாகும்

###



மரம் நடுவோம், மழை பெறுவோம்


உண்மையிலேயே மரம் நட்டால் மழை வருமா? 


மழை வருவதால் மரம் வளர்கிறதா, மரம் வளர்ப்பதால் மழை பெய்கிறதா? 



ஒவ்வொரு மரத்திலும் இலைகள் இருக்கும். அந்த இலைகளில் துளைகள் இருக்கும். துளைகள் என்றால் ஓட்டைகள்தானே என்று இலைகளில் எங்கே ஓட்டைகளைக் காணோமென்று தேடத் தொடங்கிவிடாதீர்கள். 



அது நுண்ணோக்கியில் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளும் அளவில் மிக நுண்ணியதாக இருக்கக்கூடிய நுண்துளைகள். 


அது இலைகளில் மட்டுமில்லை, மரத்தின் தண்டுகளிலும் இருக்கும். 


அந்த நுண்துளைகளின் மூலம்தான் மரம் தனக்குத் தேவையான வாயுக்களை கிரகித்துச் சுழற்சி முறைகளில் வெளியேற்றுகிறது. 



இலைகளிலுள்ள துளைகள் மரம் சுவாசிப்பதற்கு மட்டும் உதவுவதில்லை. மரங்களின் வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது. என்ன, மரங்களுக்கு வியர்க்குமா? 


கேட்பதற்கே விசித்திரமாக இருக்கின்றதா! ஆம், மரங்களுக்கும் வியர்க்கும். 


நம் உடலிலிருந்து ஏன் வியர்வை வடிகின்றது? மனித உடல் வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்கின்றது.


 அதுபோலத்தான் மரங்களும். மரங்கள் தாம் உறிஞ்சும் நீர்ச் சத்து முழுவதையும் வைத்துக்கொள்வதில்லை.

 

 அதைத் தன் ஆற்றல் தேவைக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்திக்

 கொண்டு மீதமாகும் நீரை இலைகளின் துளைகள் வழியாகச் சிறிது சிறிதாக வெளியேற்றிவிடுகின்றன.

 

 அப்படி வெளியேறும் நீர்ச்சத்து வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்

 படுத்துகின்றது. 

 


அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது.


 ஆனால், இந்தச் செயல்முறை மழையாக மாறுவதற்குத் திரும்பிய பக்கமெல்லாம் மரங்களை நட்டுக்கொண்டே போனால் மட்டும் போதாது. 

 ஒரே இடத்தில் அதிகமாக  வளர்க்க வேண்டும் 



ஒற்றை மரம் ஒரு நாளைக்குத் தோராயமாகச் சுமார் 200 லிட்டர்கள் வரை தண்ணீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. 


ஒரு மரத்துக்கே சில நூறு லிட்டர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள் அது ஒரு காடு. அங்கு எத்தனை ஆயிரம் மரங்கள் இருக்கின்றன! 


அத்தனை ஆயிரம் மரங்களும் வியர்வை சிந்தும்போது அந்தக் காற்று எவ்வளவு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்படித்தானே இருக்கிறது. 



 மரங்கள் வெளியிடும் நீரைச் சேமித்து வைக்க முடியாமல்,

 மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது.


மரங்கள் எப்போதுமே தனக்குத் தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக்கொள்ளும். 


அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாகக் காற்றில் கலந்துவிடுகிறது.


 உதாரணத்துக்கு ஒரு மரம் 10,000 லிட்டர்கள் நீரை உறிஞ்சினால் அதில் அதற்குத் தேவையான நீர் என்னவோ ஆயிரம் முதல் இரண்டாயிரம் லிட்டர்கள் மட்டும்தான். 

 

அதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் 8,000 லிட்டர்களை காற்றுக்குக் கொடையளித்துவிடும்.


 அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கிறது. 



நீர்நிலைகள் உள்ள தண்ணீர் வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேலே சென்று மேகக்  கூட்டமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு  நகர்ந்து செல்வது பார்த்திருப்போம் 

 

மரக்கூட்டங்கள் இணைந்து வெளியிடும் ஈரப்பத காற்று மேலே சென்று மேகங்களை  குளிர்வித்து 


 மேகங்களும் மழையை நமக்குக் கொடையளிக்கின்றன. 


#எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் 

என்ற உணர்வுடன் 



இயற்கை கூடிய காடுகளில் உடல் குளிர்ச்சியாகும் நல்ல காற்று சுவாசிப்பதற்காக உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுவதற்காக


 மரத்தின் மேல் சிறு வீடுகள் கட்டி தேவைப்படும் சமயத்தில் அங்கு தங்கும் பழக்கத்தை மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்

  

bottom of page