அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. இது மிக பழமையான கோவில்களில் ஒன்று. அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.
முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.
மதன குரு சுவாமி
இந்த கோவிலில் மவுனகுரு சாமியாக இருந்தார். அவர் பேசும் திறன் இருந்தும் பேசாமலும் எந்த செல்வத்தையும் அதாவது காசு பணம் நகை போன்ற எந்த செல்வத்தையும் தன்னுடைய வாழ்நாளில் சில காலத்திர்கு பிறகு கையில் தொடாமலும் இருந்தார்.
தன்னை காணவரும் பக்தர்களுக்கு ஆண்டவனின் அருளை கொண்டு நல்ல செய்திகளை
அவர்களுக்கு பழங்காலத்து கல்வெட்டுத் தமிழில் தரையில் எழுதி காட்டுவார். அதனை படித்து கொண்டு அவர்களுக்கு அதற்கான தீர்வை பெற்று செல்வார்கள்.
இவரை காண தினம் பல பேர் வந்து செல்வர். தன்னிடம் வருபவர்களுக்கு அவருடைய கஷ்டங்களை கேட்டு அந்த கஷ்டம் தீர்வுகாண காலத்தையும் நேரத்தையும் சொன்ன பிறகு அந்த நிலைமாறி அவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நலன்கள் கிடைத்த பிறகு தன்னை வந்து பார்க்கும்படி சொல்லுவார்.
இந்த மகான் 125 ஆண்டுகள் உயிருடன் இருந்து 1984 ஆண்டு ஐந்தாம் தேதி ஐந்தாம் மாதம் “ஜீவ சமாதி" ஆனார். இந்த மகான் குருபூஜை நாள் 5.5.1984.
இவரைப் பற்றி சிறப்பான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்... ராம்கி