top of page

சென்னையில் திருப்பதி பிரம்மோற்சவ குடை ஊர்வலம்

Oct 6

1 min read

1

161


#திருப்பதி ஏழுமலையான் பிரம்ம உற்சவம் 


#திருப்பதி ஏழுமலையான் பிரம்மஉற்சவம் ஆரம்பம் ஆவதற்கு முன்பு ஒரு வாரம் முன்பே தமிழகத்தில் சென்னையில் மிக சிறப்பான முறையில் திருப்பதிக்கு பிரம்ம உற்சவ குடை வழங்குவதற்கான குடை ஊர்வலம் சிறப்பான முறையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்





#திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பிரம்ம உட்சவம் ஆரம்பமாகும் உலகில் உள்ள எல்லாம் இடத்திலிருந்தும் திருப்பதி மலை பெருமாளை பார்க்க கூட்டம் வந்து கொண்டே இருக்கும்



#பெருமாள் பிரமோச்சத்திற்காக சென்னை கேசபெருமாள் கோவிலில் இருந்து திருப்பதிக்கு குடைகள் எடுத்துச் செல்வார்கள்




திருக்குடை எடுத்துச் செல்லும் நாள் அன்று சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து செல்லும் வழிகள் அனைத்திலும் பொதுமக்கள் ஒவ்வொருவர் விருப்பம் படி அன்னதானம் வழங்குவார்கள்



#இந்தக் குடைகள் யானைக்கவுளி தாண்டுவது குறித்த சுவாரஸ்யமான தகவல் உண்டு. யானைக்கவுனியைக் கடக்கும் போது நிற்காமல் குடையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்துவிடுவார்களாம்.



#கவுனி என்பது அந்த காலத்தில் யானை குதிரை போன்றவைகளை கட்டி வைக்கும் இடத்திற்கு கவுனி என்று பெயர்


 #சென்னையில் இன்றும் யானை கவனி என்று அழைக்கப்படுகிற இடம் உண்டு


#சென்னை, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னையைக் கடந்து செல்ல வரி செலுத்த வேண்டும். அந்த வரிச் செலுத்திவிட்டுச் செல்வதற்காகக் கட்டப்பட்ட சுவர்தான் வால்டாக்ஸ். அதில் ஆறு கதவுகள் உண்டு. அதில் ஒன்றுதான் `எலிபன்ட் கேட்' எனச் சொல்லப்படும் யானைக் கவுனி.



#கிழக்கிந்திய கம்பெனி தாங்கள் குடியமர்வதற்காகத் தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராஸப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன. இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே இப்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது.






#திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெள்ளை பட்டுவினால் செய்யப்பட்ட திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.



அந்த கால முதல் இன்று வரை பட்டு நூலினால் செய்யப்படும் துணிகளுக்கு காஞ்சிபுரம் உள்பட தமிழ்நாடு பட்டு சிறப்பு உடையது

தமிழ்நாட்டு வெண்பட்டு கொண்டு செய்த குடையை 300 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படும்


ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள்.

#சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடைகள் ஊர்வலம் தொடங்கி என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, 


#அன்று மாலை 4 மணிக்கு கவுனி தாண்டும். பின்னர், யானைக்கவுனி பாலம், சூளை நெடுஞ்சாலை வழியாக திருக்குடை ஊர்வலமாக எடுத்துச் சென்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் கொடுப்பார்கள்#

bottom of page