கொலு வைப்பதற்கான காரணம்
ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள அனைத்து ஜீவராசிகளும்
தன்னுடைய இயற்கையான அறிவு செயல்பாட்டில் வாழ்கின்றன
ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனுடைய சுய அறிவு திறமை
மேன்மையும் சிறப்பும் சேரும்போது
அந்த இனத்திலிருந்து இறந்து அடுத்து பிறக்கும்போது
ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை ஒவ்வொரு உயிரினமும் பரிணாம வளர்ச்சியில் உந்தப்பட்டு
ஐந்தறிவு வரை வளர்ந்து கொண்டு வருகிறது
இவ்வாறான நிலையில் இருந்து சிறப்பு நிலை ஏற்படும்போது அடுத்த நிலையாக ஆறறிவு கொண்ட மனிதனாக அந்த இனம் மாறுகிறது
மனித இனம் உருவாகிறது
உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் ஆக்கப்பட்ட நல்வினைகள் செய்து
இறையாற்றலை நாடும் ஆன்மாக்கள் தெய்வீக ஆன்மா
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்
ஆன்மா ஓரறிவு முதல் ஆறறி வரை பரிணாம வளர்ச்சியை பெற்று மனிதனாக தோன்றி மனித வளர்ச்சியின் அறிவாலும்
அறிவு தெளிவுபடும் பொழுது ஆன்மா சக்தியை உணர்ந்து
மனித உடலின் அறிவைக் கொண்டு யோகம் தியானம் போன்ற பயிற்சிகளின் மூலமாக உடலை பக்குவப்படுத்தி ஆன்மாவை தன் வசம் படுத்தும் பொழுது ஆன்மா சிறந்த நிலை பெறுகிறது அதுதான் மகான்களும் சித்தர்களும் உருவாக முக்கிய காரணமாக அமைகிறது
சிறந்த உடல் மூலமாக பக்குவப்பட்ட ஆன்மா அடுத்த நிலை பெறும் பொழுது தான் தெய்வ ஆத்மாவாக மாறுகிறது
சிவத்தில் இருந்து சக்தி தோன்றி சிவசக்தியாக உருமாறி சிவசக்தியுடன் பெருமாள் உருவாகி பெருமாள் மூலமாக பிரம்மா உருவாகி
பிரம்மாவின் மூலமாக தெய்வங்கள் உருவாகி தெய்வங்களின் துணை கொண்டு பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது தான் மனித இன ஆன்மாக்கள்
இந்த ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் கொலு என்ற முறையை ஏற்படுத்தி விலங்கு முதல் மனிதன், இறைவன் வரை எல்லா பொம்மைகளை வைத்து
நம் குழந்தைகளுக்கு இதன் பற்றிய கதையை சொல்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் கொலு வைக்கும் நிகழ்வு. ராம்கி